மனப்பாடப்பகுதி
UPDATED : மே 19, 2017 | ADDED : மே 19, 2017
அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்குஉற்ற நற்றுணை யாவான் உறைபதிதெற்ற மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்கற்றுச் சேர்பவர்க்கு கருத்தாவதே.(திருநாவுக்கரசர் தேவாரம்)பொருள்: ஆதரவில்லாத நிலையில் உள்ளவர்களுக்கு உற்ற துணையாக வருபவர் சிவன். அப்பெருமான் வீற்றிருக்கும் தலம் ஸ்ரீவாஞ்சியம். மாட மாளிகைகள் நிறைந்த அவ்வூரின் மகிமை அறிந்து தரிசித்தவர்களுக்கு, அந்த நினைவு எப்போதும் மறக்காது.