மனப்பாடப்பகுதி
UPDATED : ஜூன் 29, 2017 | ADDED : ஜூன் 29, 2017
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகைஇடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழியகடந்த நம்பி கடியார் இலங்கை உலகை யீரடியால்நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே!(திருமங்கையாழ்வார் பாடல்)பொருள்: கும்பகோணத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பவரே! வராக அவதாரம் எடுத்து பூமியைக் காத்தவரே! எங்கள் குறைகளைப் போக்கியவரே! ராமாவதாரம் எடுத்து பகைவர்களின் கோட்டையை அழித்தவரே! அரக்கர்கள் வாழ்ந்த இலங்கையை நாசம் செய்தவரே! வாமனராக வந்து உலகை இரு அடிகளால் அளந்தவரே! பெருமை மிக்க செயல்களில் ஈடுபட்ட உனது திருநாமம் 'நமோ நாராயணாய' என்பதாகும்.