உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

செல்வம் எட்டும் எய்திநின்னால் செம்மையேறி வாழ்வேன்இல்லை என்ற கொடுமைஉலகில் இல்லையாக வைப்பேன்முல்லை போன்ற முறுவல் காட்டிமோக வதை நீக்கிஎல்லையற்ற சுவையேஎனை நீ என்றும் வாழ வைப்பாய்.(பாரதியாரின் லட்சுமி பாட்டு)பொருள்: லட்சுமித்தாயே! உன்னருளால் அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழும் பாக்கியம் பெறுவேன். இல்லை எனச் சொல்லும் கொடுமை இவ்வுலகில் இல்லாமல் செய்வேன். எல்லையற்ற பேரின்பமே! நல்வாழ்வு தருபவளே! முல்லை மலர் போன்ற சிரிப்பால் மோகம் என்னும் ஆசையில் இருந்து காப்பாயாக.