மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 04, 2017 | ADDED : ஆக 04, 2017
குயிலாய் இருக்கும் கடம்பாடவி யிடைக்கோலஇயல்மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை வந்து உதித்தவெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி பாடல்)பொருள்: கடம்பவனம் என்னும் மதுரையில் வாழும் குயில் போன்ற மீனாட்சியே! பனிமலையான இமயத்தில் அருள்புரியும் மயிலே! ஆகாயத்தில் விளங்கும் ஞானச்சுடரே! தாமரையே! அழகு அன்னமே! கைலாயநாதரான சிவனுக்கு மலையரசனால் மணம் செய்யப்பட்ட அழகு ஆபரணமே! உன்னை வணங்குகிறேன்