மனப்பாடப்பகுதி
UPDATED : செப் 01, 2017 | ADDED : செப் 01, 2017
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னைஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிர் உண்டான்சீர்மல்கு சோலை தென்காட்கரை என்னப்பன்கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே.(நம்மாழ்வார் பாசுரம்)பொருள்: பசுமையான சோலைகள் நிறைந்த திருகாக்கரையில் வீற்றிருக்கும் வாமனன், தன் குளிர்ந்த குணத்தால் என் உள்ளம் கவர்ந்தான். என் உயிராக மாறினான். அந்த கார்மேனி வண்ணனின் மாயச் செயல்களை என்னால் அறிய முடியவில்லை.