மலரத்தான் போகுது புதுவாழ்வு
* நல்ல செயல்களை செய். புதுவாழ்வு மலர்வதை காண்பாய். * நீ செய்யும் தவறுகளுக்கு காரணம் ஆசையே. அதை தவிர்த்திடு.* பிறர் தீமை செய்தாலும் பயப்படாமல் இரு. அது உன்னை பாதிக்காது.* சோதனை வரும்போதுதான் உன்னுடைய பலத்தை அறிந்து கொள்கிறாய். * அனைத்தையும் கடந்தவர் கடவுள். அவரை எந்தவொரு எல்லைக்குள்ளும் கொண்டுவர முடியாது. * தவறு செய்வது உன் இயல்பு. அதை ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.* உயிர்களிடம் நீ அன்பு காட்டினால் கடவுள் உன் மீது அன்பாக இருப்பார். * உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட உயிர்களை கொல்லாமல் இரு. * கடவுளின் அருளைப் பெறவே நாம் மனிதப்பிறவியை எடுத்துள்ளோம். * நல்ல எண்ணத்தோடு இரு. அதுவே கவசமாக இருந்து உன்னை பாதுகாக்கும்.* பெரியோர்களின் மனதை காயப்படுத்தாதே. அது பெரும்பாவம்.* பயன்தரும் மரங்களை வெட்டாதே. * பசியில் இருப்போருக்கு உணவு கொடு. அதுவே தர்மத்தில் மேலானது. * உண்மையாக இருந்தால் உண்மையின் சக்தி உனக்கு புரியவரும். சொல்கிறார் வள்ளலார்