உள்ளூர் செய்திகள்

சூரியன் 108 போற்றி

பொங்கலன்றும், தை மாத ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயமானதும், இந்த சூரிய போற்றியை வழிபட்டால், ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.1.ஓம் அதிதி புத்ரனே போற்றி2.ஓம் அளத்தற்கரியனே போற்றி3.ஓம் அறுகுப்பிரியனே போற்றி4.ஓம் அருணன் சோதரனே போற்றி5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி7.ஓம் ஆண் கிரகமே போற்றி 8.ஓம் ஆதிவார நாதனே போற்றி9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி11.ஓம் ஆன்மாவே போற்றி12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி13.ஓம் இருள் நீக்கியே போற்றி14.ஓம் இயக்க சக்தியே போற்றி15.ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி16.ஓம் உக்கிரனே போற்றி17.ஓம் உஷா நாதனே போற்றி18.ஓம் உவமைப் பொருளே போற்றி19.ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி20.ஒம் உத்திரநாதனே போற்றி21.ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி22.ஓம் என்பானவனே போற்றி23.ஓம் எருக்கு சமித்தனே போற்றி24.ஓம் எழுபரித் தேரனே போற்றி25.ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி26.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி27.ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி28.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி29.ஓம் ஓராழித்தேரனே போற்றி30.ஓம் ஓய்விலானே போற்றி31.ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி32.ஓம் கதிரவனே போற்றி33.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி34.ஓம் களங்கமிலானே போற்றி35.ஓம் கமலம் விரிப்பவனே போற்றி36.ஓம் கர்ணன் தந்தையே போற்றி37.ஓம் கனலே போற்றி38.ஓம் கண்ணின் காவலே போற்றி39.ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி40.ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி41.ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி42.ஓம் காயத்ரி தேவனே போற்றி43.ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி44.ஓம் காலக் கணக்கே போற்றி45.ஓம் காய்பவனே போற்றி46.ஓம் காலை மாலை கனிவோனே போற்றி47.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி48.ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி49.ஓம் கிரக நாயகனே போற்றி50.ஓம் கிருபாகரனே போற்றி51.ஓம் குந்திக்கருளியவனே போற்றி52.ஓம் குறை தீர்ப்பவனே போற்றி53.ஓம் கோதுமைப்பிரியனே போற்றி54.ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி55.ஓம் ஞாயிறே போற்றி56.ஓம் ஞாலக் காவலே போற்றி57.ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி58.ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி59.ஓம் சாட்சித் தேவனே போற்றி60.ஓம் சமரிலானே போற்றி61.ஓம் சிங்கக் கொடியனே போற்றி62.ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி63.ஓம் சிரஞ்சீவியே போற்றி64.ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி65.ஓம் சுயம்பிரகாசனே போற்றி66.ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி67.ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி68.ஓம் செம்மேனியனே போற்றி69.ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி70.ஓம் செந்நிறக்குடையனே போற்றி71.ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி72.ஓம் சூலாயுதனே போற்றி73.ஓம் சோழர் மூதாதையனே போற்றி74.ஓம் சவுர மதத் தலைவனே போற்றி75.ஓம் தனிக்கோயிலுளானே போற்றி76.ஓம் தாமிர உலோகனே போற்றி77.ஓம் தூயவனே போற்றி78.ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி79.ஓம் நடுவிருப்போனே போற்றி80.ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி81.ஓம் நலமே அளிப்பவனே போற்றி82.ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி83.ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி84.ஓம் நாடப்படுபவனே போற்றி85.ஓம் நீதிதேவனே போற்றி86.ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி87.ஓம் பகற்காரணனே போற்றி88.ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி89.ஓம் பரஞ்சோதியே போற்றி90.ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி91.ஓம் பாலைநிலத்தேவனே போற்றி92.ஓம் பிரபாகரனே போற்றி93.ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி94.ஓம் புத்தியளிப்பவனே போற்றி95.ஓம் மல நாசகனே போற்றி96.ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி97.ஓம் மயில்வாகனனே போற்றி98.ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி99.ஓம் முதல் கிரகமே போற்றி100.ஓம் முக்கோணக் கோலனே போற்றி101.ஓம் முழுமுதற் பொருளே போற்றி102.ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி103.ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி104.ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி105.ஓம் விடியச் செய்பவனே போற்றி106.ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி107.ஓம் 'ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி108.ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!