சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
1. திருவண்ணாமலையின் உயரம்........2665 அடி2. திருவண்ணாமலை தீபதரிசன மண்டபம் கட்டியவர்..........மங்கையர்க்கரசியார் (கி.பி.1202)3. திருவண்ணாமலையில் அதிகம் விற்று சாதனை படைத்த நூல்.......திருவண்ணாமலை மலைவல மகிமை4. அடியண்ணாமலை மடுதீர்த்தத்தை பாடிய அருளாளர்.........மாணிக்கவாசகர்5. சகஸ்ர தீபம்(ஆயிரம் விளக்கு) என்னும் நூலை எழுதியவர்........வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி6. சகஸ்ரதீபம் நூலில் போற்றப்படும் கடவுள்.........கம்பத்து இளையனார் (திருவண்ணாமலை முருகன்)7. திருவண்ணாமலையில் அருளும் உண்ணாமுலை அம்மனின் உயரம்.........மூன்றடி8. திருக்கார்த்திகையன்று அதிகாலையில் ஏற்றப்படும் தீபம்.........பரணி தீபம்9. அண்ணாமலை சிவனை பிள்ளையாக அடையும் பேறு பெற்றவர்கள்..............வல்லாளமகாராஜன், சல்லம்மா தேவி10. திருவண்ணாமலை ஆதீனத்தை தோற்றுவித்தவர்........தெய்வசிகாமணி தேசிகர்