உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* உபநிஷதம் என்பதன் பொருள் 'குருவிடம் அமர்ந்து கற்கும் வித்தை'* வேதத்தின் இதயமாக கருதப்படும் மந்திரம் ஸ்ரீருத்ரம்.* யோகாசனப் பயிற்சியின் தந்தையாக விளங்குபவர் பதஞ்சலி முனிவர்.* மனதை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி பிராணயாமம்.* தட்சிணேஸ்வரம் காளி கோயிலைக் கட்டியவர் ராணி ராசமணி.* தமிழுக்கு கதியாக திகழ்பவர்கள் க - கம்பர் தி- திருவள்ளுவர். * மன்மதனின் மனைவி ரதிதேவி. * திருமாலின் மூன்று தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி.* கடவுளின் அழகை பாதம் முதல் தலை வரை பாடுவது பாதாதிகேசம். * ஞானதீபம் என ராமானுஜரால் போற்றப்பட்ட பாசுரம் முதல் திருவந்தாதி.* முதல் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார் பொய்கையாழ்வார்.* சித்தாந்த அஷ்டகம் என்னும் எட்டு நுால்களை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார். * சுக்கிராச்சாரியாரின் மனைவியின் பெயர் சுகீர்த்தி.* கோப பிரசாதம் என்னும் நுாலை எழுதியவர் நக்கீரர்.* தந்தையாரின் காலை வெட்டிய சிவனடியார் சண்டேச நாயனார்.