சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* ராமன் என்பதன் பொருள் ஆனந்தமாக இருப்பவன்.* ஞானியாக வாழ்ந்த ராமனின் சிற்றன்னை சுமித்ரை.* சீதையை திருமணம் புரிய ராமன் ஒடித்த வில் சிவதனுசு.* ராம தரிசனத்திற்காக காத்திருந்தவர் சபரி.* சரயு நதிக்கரையில் உள்ள நகரம் அயோத்தி.* ராம காவியம் இயற்ற கம்பருக்கு உதவியவர் சடையப்ப வள்ளல்.* ஸ்ரீராம நவமியன்று அவதரித்த மகான் ஷீரடி சாய்பாபா.* 'சிறையிருந்தவள் ஏற்றம்' எனப்படும் காவியம் ராமாயணம்.* ராமர் பூலோகத்தில் வாழ்ந்த ஆண்டுகள் 11 ஆயிரம் ஆண்டுகள்.* ராம பட்டாபிஷேகத்தில் சிம்மாசனத்தை தாங்கியவர் அனுமன். * ராம பட்டாபிஷேகத்தில் அனுமனுக்கு கிடைத்த பரிசு முத்து மாலை.* ராம நாமத்தை இடைவிடாமல் ஜபித்த வேடன் ரத்னாகரன் (வால்மீகி).* வால்மீகி என்பதன் பொருள் 'புற்றில் இருந்து வந்தவர்'.* துளசிதாசர் எழுதிய ராமாயணத்தின் பெயர் ராமசரித மானஸ்.* மிதிலையில் பிறந்ததால் சீதைக்கு 'மைதிலி' என்று பெயர்.* ராமபக்தியில் ஈடுபட்ட ஆழ்வார் குலசேகராழ்வார்.* ராஜாஜி எழுதிய ராமாயணம் 'சக்கரவர்த்தி திருமகன்'.