சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : மே 09, 2022 | ADDED : மே 09, 2022
* அகோபிலம் நரசிம்மர் மீது ராமர் பாடிய பாடல் பஞ்சாமிர்த ஸ்தோத்திரம்* ராம சகோதரர் நால்வருக்கும் தனிக்கோயில்கள் உள்ள மாநிலம் கேரளா. இதை 'நாலம்பலம்' என அழைக்கின்றனர். * அமாசோமவாரம் என்பது அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்த நாளாகும்.* பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் பத்தாம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.* நவக்கிரகங்களில் பூரண சுபராக விளங்குபவர் குருபகவான். * கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்துவது வழக்கம். * கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம் வரகு.* நாயன்மார்களின் எண்ணிக்கை 63. ஆழ்வார்களின் எண்ணிக்கை 12.* விநாயகரால் கொல்லப்பட்ட யானைமுக அசுரனின் பெயர் கஜமுகாசுரன்.* காதலாகி கசிந்து கண்ணீர் சிந்திய சிவனடியார் திருஞானசம்பந்தர். இவர் பாடிய முதல் தேவாரம் 'தோடுடைய செவியன்'.