உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* குழந்தையும், தெய்வமும் ஒன்று. எனவே குழந்தைகளை திட்டாதீர்கள். * ராமபிரான் தனது தோஷம் தீரும் பொருட்டு சிவபெருமானை வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இத்தலத்தில் மூன்று நாட்கள் தங்கி சுவாமி தரிசனம் செய்தால் நாம் செய்த பாவம் தீரும்.* விநாயகருக்கு தேங்காய் உடைப்பது விசேஷம். மற்ற கடவுளுக்கு தாம்பூலத்தோடு தேங்காய் உடைத்து சமர்ப்பிப்பதே சிறப்பு. * கையில் எடுத்த சோற்றை பாதியை சாப்பிட்டு, மீதியை மீண்டும் தட்டில் உள்ள சோற்றோடு கலக்கக்கூடாது. இது அன்ன தோஷமாகும். * சாப்பாட்டை குறைகூறுபவர்கள் மறு பிறவியில் பிச்சை எடுத்து உண்பார்கள். * திருவண்ணாமலையை கிரிவலம் வருவதற்கு ஏற்ற நேரம் நள்ளிரவு 3:00 - அதிகாலை 4:00 மணி வரை ஆகும். * மகாலட்சுமிக்கு பிரியமான கண்ணாடியை சுத்தமாக வைத்திருங்கள். * கோயிலுக்கு செல்கையில் ஒருவரை அழைத்து, அவர் வரவில்லையெனில் நமக்கு மனக்கஷ்டம் உண்டாகும். இதனால் யாரையும் அழைக்காதீர். * அமாவாசையன்று செடி, கொடிகளை தொடவோ, இலைகளை உதிர்ப்பதோ, வெட்டுவதோ கூடாது.* மலர், பழம் இல்லையென்றாலும் நீரை வைத்து பூஜை செய்தாலே போதும். ஆனால் அதற்கு நல்ல மனம் வேண்டும். * சிவன் என்ற சொல்லுக்கு மந்திரம், மங்களம் என்று பொருள். * பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்தால் உங்கள் பாவம் தீரும்.