உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* கடவுளுக்கு மூன்று வேளைதான் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதிலும் பிரசாதம் சூடாக, ஆறிப்போயும் இருக்கக்கூடாது. * கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபிறகு, பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். * உடல்நலத்துடன் வாழ காலையில் எழுந்தவுடன், கண் கண்ட தெய்வமான சூரியனை வணங்குங்கள். * சூரிய உதயம், அஸ்தமன நேரம் என்பது சுபத்தன்மை வாய்ந்தது. அதில் தொடங்கும் செயல்கள் வெற்றிகரமாக முடியும். * தானம் வழங்குவதால் மட்டும் ஒருவரது பாவம் தொலையாது. தனக்கான கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும். * கார்த்திகை, திருவோண நட்சத்திரம் விரதத்திற்கு உகந்தது. அன்று மனித நடமாட்டமே இல்லாத இடத்தில், சாப்பிடாமல் மவுன விரதம் இருப்பவர்கள் ஞானியாவர். * கிணறு புனிதமானது. ஆகவே கிணற்றில் மூழ்கி குளிக்காமல், தண்ணீரை வாளியில் எடுத்தே குளிக்க வேண்டும். * பெருமாள் கோயிலில் முதலில் மகாலட்சுமி தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். * சிவன் கோயிலில் முதலில் சிவனை வணங்கிய பிறகே, அம்பாளை வணங்க வேண்டும். * கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடுவதுபோல் கனவு கண்டால் நல்லது நடக்கும். * நல்லெண்ணெய்யில் தயாரித்த உணவுகளை இரவில் சாப்பிட வேண்டாம்.* உணவுத்தட்டை கையில், மடியில் வைத்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். * ஆண் தெய்வத்தை முதலில் அவரது பாதத்தை பார்த்தும், பெண் தெய்வத்தை முதலில் அவரது கண்களை பார்த்தும் வணங்க வேண்டும்.