உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானேகாவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர: பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்!பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!பொருள்: காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே! ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே! ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே! ரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன். குறிப்பு: ரங்கநாத ஸ்தோத்திர ஸ்லோகம்.