முருகவேள் பன்னிரு திருமுறைகள்
சிவபெருமானுக்கு பன்னிரு திருமுறைகள் இருப்பது போல முருகனுக்கும் உண்டு. இதை முருகவேள் பன்னிரு திருமுறைகள் என்பர். தொகுத்தவர் தேனுார் வரகவி சொக்கலிங்கம். * முதல் திருமுறை - திருப்பரங்குன்றம் திருப்புகழ் * இரண்டாம் திருமுறை - திருச்செந்துார் திருப்புகழ் * முன்றாம் திருமுறை - திருவாவினன்குடி திருப்புகழ் * நான்காம் திருமுறை - திருவேரகம் திருப்புகழ் * ஐந்தாம் திருமுறை - திருத்தணி திருப்புகழ் * ஆறாம் திருமுறை - சோலைமலை திருப்புகழ் * ஏழாம் திருமுறை - மற்ற முருகன் தலங்களுக்குரிய திருப்புகழ் * எட்டாம் திருமுறை - கந்தர் அலங்காரம், கந்தரந்தாதி * ஒன்பதாம் திருமுறை - திருவகுப்பு * பத்தாம் திருமுறை - கந்தரனுபூதி * பதினோராம் திருமுறை - சங்க இலக்கியம் முதல் பிற்கால இலக்கியம் வரையுள்ள முருகன் பாடல்கள். * பன்னிரண்டாம் திருமுறை - அருணகிரிநாதர், அகத்தியர், நக்கீரர் முதலான 41 அடியார்களின் வரலாற்றை விளக்கும் சேய்த்தொண்டர் புராணம்