இந்த வாரம் என்ன
ஏப்.30, சித்திரை 17: சங்கடஹர சதுர்த்தி, அரியலுார் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியபெருமாள் ஏகாந்த சேவை, சென்னை கேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கில் நாச்சியார் திருக்கோலம், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அனுமன் வாகனம்மே 1, சித்திரை 18: வராக ஜெயந்தி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலையில் சூர்ணாபிேஷகம், மாலை புண்ணிய கோடி விமானம்மே 2, சித்திரை 19: ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்னை சென்ன கேசவப்பெருமாள் தேர், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்மே 3, சித்திரை 20; திருவோண விரதம், ஸ்ரீரங்கம் பெருமாள் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், சென்னை கேசவப்பெருமாள் காலையில் யாளி வாகனம், மாலையில் தங்க குதிரை வாகனம்மே 4, சித்திரை 21: அக்னி நட்சத்திரம் ஆரம்பம், நடராஜர் அபிேஷகம், ஸ்ரீரங்கம் பெருமாள் கருட வாகனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் ஆடும் பல்லக்கிலும், கண்ணாடி பல்லக்கிலும் பவனி, சென்னை கேசவப்பருமாள் தங்கப் பல்லக்கு, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்மே 5, சித்திரை 22: ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி சன்னதியில் நான்கு கருடசேவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சப்தாவர்ணம், திருவாய்மொழி சாற்றுமுறை, சென்னை கேசவப்பெருமாள் புஷ்பப்பல்லக்கு, திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிேஷகம், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருமஞ்சனம்மே 6, சித்திரை 23: ஸ்ரீரங்கம் பெருமாள் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்ன கேசவப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், திருச்செங்காட்டங்குடி உத்திரபசுபதீஸ்வரர் உற்ஸவம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, திருநாவுக்கரசர் குருபூஜை