இந்த வாரம் என்ன
ஆக.13, ஆடி 28: கருட பஞ்சமி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் பவனி, மதுரை சொக்கநாதர் மாணிக்கம் விற்றருளிய லீலை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், திருவாடானை சினேகவல்லியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகியம்மன் ஊஞ்சல் காட்சி, இருக்கன்குடி மாரியம்மன் ஆடிவிழா, கோவை கந்தேகவுண்டர் சாவடி மகாகாளியம்மன் தேரோட்டம், படைவீடு ரேணுகாம்பாள் அலங்காரம், பெருமிழலைக்குறும்பர் குருபூஜைஆக.14, ஆடி 29: சஷ்டி விரதம், மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய காட்சி, விருதுநகர் சிவன் கைலாச வாகனம், அம்மன் காமதேனு வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சல் காட்சி, நயினார்கோவில் சவுந்திரநாயகி மஞ்சள் நீராட்டு விழா, குறுக்குத்துறை முருகன் புறப்பாடு, பட்சிராஜர் திருநட்சத்திரம், சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜைஆக.15, ஆடி 30: மதுரை சொக்கநாதர் உலவாய்க்கோட்டை அருளிய லீலை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, ஏகசிம்மாசன பவனி, விருதுநகர் சிவன் யானை வாகனம்.ஆக.16, ஆடி 31: மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, ராமேஸ்வரம் சுவாமி நந்திகேஸ்வரர், அம்மன் வெள்ளியானையில் பட்டின பிரவேசம், விருதுநகர் சிவன் குதிரையிலும், அம்மன் சிம்மத்திலும் பவனி, குறுக்குத்துறை முருகன் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்ஆக.17, ஆவணி1: விஷ்ணுபதி புண்ணிய காலம், மதுரை சொக்கநாதர் வளையல் விற்ற லீலை, இரவு சுவாமி பட்டாபிேஷகம், ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் பவனி, விருதுநகர் சுவாமி, அம்மன் ரிஷப வாகனம், சுவாமி மலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், மதுரை கூடலழகர் பவனி ஆக.18, ஆவணி 2: ஏகாதசி விரதம், மதுரை சொக்கநாதர் நரிகளை பரிகளாக்கிய லீலை, ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், விருதுநகர் சிவன் நந்தி, அம்மன் காமதேனு வாகனம், கரிநாள், ஆக,19, ஆவணி 3: மதுரை சொக்கநாதர் புட்டுக்கு மண் சுமந்த லீலை, குறுக்குத்துறை முருகன் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்.