இந்த வாரம் என்ன
ஆக.20, ஆவணி 4: முகூர்த்த நாள், பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல். வரலட்சுமி விரதம், மதுரை சொக்கநாதர் விறகு விற்ற லீலை, சுவாமி, அம்மன் தங்கச் சப்பரம், விருதுநகர் சிவன் தேர், குறுக்குத்துறை முருகன் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், மொகரம் ஆக.21, ஆவணி 5: ஓணம், ரிக் உபாகர்மம், திருவோண விரதம், பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சப்தாவர்ணம், விருதுநகர் சொக்கநாதர் ரிஷப வாகனம், குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு, காஞ்சிபுரம் வரதராஜர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்களில் திருமஞ்சனம், ஒப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் பவனி, ஆக.22, ஆவணி 6: ஆவணி அவிட்டம், யஜூர் உபாகர்மம், பவுர்ணமி விரதம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 7:23 - 7:59 மணி, ஆவணி ஞாயிறு விரதம், சூரியனுக்கு விரதமிருந்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், மதுரை மீனாட்சி, சொக்கநாதர் ரிஷபாரூட தரிசனம், அவினாசி சிவன் பவுர்ணமி பூஜை, அறுபத்து மூவருடன் குருபூஜை செய்தருளும் காட்சிஆக.23, ஆவணி 7: காயத்ரி ஜபம், காயத்ரி மந்திரத்தை 1008 முறை ஜபித்தல், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம்ஆக.24, ஆவணி 8: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்ஆக.25, ஆவணி 9: மகாசங்கடஹர சதுர்த்தி, திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், வாரியார் பிறந்த நாள், கரிநாள்ஆக.26, ஆவணி10: முகூர்த்த நாள், தேவகோட்டை ரங்கநாதர் பவனி, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.