இந்த வாரம் என்ன
செப்.24, புரட்டாசி 8: சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல்மாலை சாத்தி வழிபடுதல், மகாபரணி, தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடுசெப்.25, புரட்டாசி 9: கார்த்திகை விரதம், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல், புரட்டாசி இரண்டாவது சனி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், திருச்சி ஸ்ரீரங்கம், திருவள்ளூர், காஞ்சிபுரம் கோயில்களில் பெருமாள் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனம், குச்சனுார் சனீஸ்வரர் அபிேஷகம்செப்.26, புரட்டாசி 10: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், பழநி முருகன், திருச்செந்துார் முருகன் பவனிசெப்.27, புரட்டாசி 11: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பவனி, திருநாளைப்போவார் நாயனார் குருபூஜைசெப்.28, புரட்டாசி 12: சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்செப்.29, புரட்டாசி 13: மத்யாஷ்டமி, முன்னோர் தர்ப்பணம் கொடுத்தல், லட்சுமி விரதம் ஸமாப்தம், மகாவியதி பாதம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிேஷகம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்செப்.30, புரட்டாசி 14: அவிதவா நவமி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், பத்ராசலம் ராமர் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமர் திருமஞ்சனம்