உள்ளூர் செய்திகள்

புனிதம் பெற...

காஞ்சி மஹாபெரியவர் தஞ்சாவூருக்கு வந்தால் பங்காரு காமாட்சி அம்மனைத் தரிசிக்காமல் இருந்ததில்லை. இக்கோயில் காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புடையது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷியாமா சாஸ்திரிகள் இங்கு பூஜை செய்துள்ளார்.1941 ஜூன் 4ல் இக்கோயிலின் கும்பாபிஷேத்தை காஞ்சி மஹாபெரியவர் முன்னின்று நடத்தினார். அதன்பின் கோயிலுக்கு அருகிலேயே தங்கி சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்தார். அப்போது பூண்டி வீரய்யா வாண்டையார் தரிசனம் செய்ய வந்தார்.சுவாமிகளை வணங்கி ஆசி பெற்ற போது, ''எஜமான்... பூண்டிக்கு தாங்கள் ஒருமுறை வரவேண்டும். தங்களின் பாதம் பட்டு எங்கள் மண் புனிதம் பெற வேண்டும்'' என வேண்டினார். அதை ஏற்று பூண்டிக்கு விஜயம் செய்தார். நான்கு நாள் தங்குவது என தீர்மானித்தார். அங்குள்ள கிராமத்தினர் குவிந்தனர். ஐந்தாம் நாள் காலையில் பூண்டியில் இருந்து புறப்பட சுவாமிகள் தயாரானார். மடத்தின் சிப்பந்தி ஒருவரின் மூலம் வாண்டையாருக்கு தகவல் அனுப்பினார். அதைக் கேட்டு, 'சற்று பொறுங்கள். இதோ வருகிறேன்' என்று சொல்லி பைண்டிங் செய்த புத்தகம் ஒன்றை எடுத்து காட்டினார் வாண்டையார். கடுக்காய் மையினால் எழுதப்பட்ட அக்குறிப்பில், '1899ல் பூண்டிக்கு விஜயம் செய்த திருவாவடுதுறை ஆதினம் சுப்ரமண்ய தேசிகர் ஒரு மாதம் சீடர்களுடன் தங்கியிருந்தார்' என்றிருந்தது. 'திருவாவடுதுறை ஆதினம் போல ஒரு மாதம் தங்காவிட்டாலும் ஒரு வாரமாவது சுவாமிகள் தங்கியிருக்க வேண்டும். இன்று மாலையே நானும் நேரிலும் வந்து என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்' என்றார். மஹாபெரியவர் மறுக்காமல் தங்கினார். இதனால் வாண்டையார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்