எப்படி அழைத்தாலும்...
UPDATED : பிப் 09, 2024 | ADDED : பிப் 09, 2024
கிராமத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தைஅமாவாசையன்று திருப்பதிக்குச் சென்றார். அங்குள்ள குளத்தில் நீராடி கரையில் நின்றபடி “கோஹிந்தா... கோஹிந்தா... என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்று” என வேண்டினார். அதைக் கேட்ட அந்தணர் ஒருவர், “ தவறாக சொல்வது கூடாது. கோவிந்தா என்றே பெருமாளை அழைக்க வேண்டும்'' என திருத்தினார். அந்த பக்தர் மீண்டும், ''கோஹிந்தா! கோஹிந்தா! ஆண்டுதோறும் இப்படியே உன்னை வணங்கி வருகிறேன். முப்பத்திரண்டு ஆண்டுகளாக என்னை நல்ல நிலையில் வைத்திருக்கிறாய். இனியும் இப்படியே இருக்க அருள்புரிவாய்'' என தலை மீது கைகுவித்து வழிபட்டார். இதைக் கேட்ட அந்தணர் ''எப்படி அழைத்தாலும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் அன்பை ஏற்று அருள்புரிகிறார் என்பதற்கு இந்த பக்தரே உதாரணம்! ஏழுமலையானின் மகிமையை என்ன என்று சொல்வது” என வியந்தார்.