உள்ளூர் செய்திகள்

பணப்புழக்கம் அதிகரிக்க...

காஞ்சிபுரம் அருகிலுள்ள துாப்புல் கிராமத்தைச் சேர்ந்த அனந்தசூரி, தோடராம்பா தம்பதியின் மகன் வேதாந்த தேசிகர். இவர் தன் தாய்மாமனான கிடாம்பி அப்புல்லாரிடம் வேத, ஆகம, புராண, சாஸ்திரங்களைக் கற்று வைணவ ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். வைராக்கியம் என்னும் குணத்தை தேசிகரிடம் இருந்தே கற்க வேண்டும் என பெரியவர்கள் சொல்வர். அன்றாட தேவைக்கான தானியங்களை உஞ்சவிருத்தி (பிட்ைஷ) மூலம் யாசகமாக பெற்றுக் கொள்வார். ஒருமுறை சிலர் பொற்காசுகளை இட்ட போது, அவற்றைத் தொட விரும்பாமல் குச்சியால் அப்புறப்படுத்தினார். தேசிகர் மீது பொறாமைப்பட்ட ஒருவன் வம்பிழுக்க எண்ணினான். அதற்காக இளைஞன் ஒருவரிடம், 'வேதாந்த தேசிகர் நிறைய பொற்காசுகள் வைத்திருக்கிறார். நீ அவரை அணுகினால் வறுமையின்றி வாழலாம்' என ஆசை வார்த்தை கூறினான். இளைஞனும் நம்பினான். ஞானதிருஷ்டியால் இதை அறிந்த தேசிகர், 'ஸ்ரீஸ்துதி' என்னும் ஸ்லோகம் பாடி மகாலட்சுமியை வழிபட்டார். இளைஞனிடம், ' ஸ்ரீஸ்துதியை பாடியபடி மகாலட்சுமி சன்னதியை தினமும் சுற்று' என்றார். அவ்வாறே அவனும் செய்தான். பிறர் நலனில் அக்கறை கொண்ட தேசிகரின் செயலால் பொன்மழை பெய்தது. பிறகு என்ன! இளைஞன் பெரிய பணக்காரன் ஆனான். ஸ்ரீஸ்துதியின் 21ம் ஸ்லோகத்தை பாடினால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஸானுப்ராஸ ப்ரகடித தயை:ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை:அம்ப! ஸ்நிக்தைர் அம்ருத லஹரீலப்த ஸப்ரஸ்மசர்யை:கர்மே தாபத்ரய விரசிதேகாட தப்தம்ஷணம் மாம்ஆகிஞ்சன்ய க்லபிதம் அநகைர்ஆத்ரியேதா கடாக் ஷைஇதன் விளக்கம்...கருணை மிக்க மகாலட்சுமி தாயே! தாயன்பு மிக்கவளே! பக்தர்களுக்கு துணை நிற்பவளே! அமிர்தம் போல குளிர்ச்சி மிக்கதும், பரிசுத்தமானதுமான அருளைத் தருபவளே! உச்சி வெயிலில் நடப்பவன் தாகத்தால் தவிப்பது போல பணமின்றி வாடும் என்னை கடைக்கண்ணால் குளிரச் செய்வாயாக!.