பாதுகாப்பான முதலீடு
UPDATED : பிப் 01, 2015 | ADDED : பிப் 01, 2015
* இரக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களே ஆன்மிகநெறி வழி நடக்க தகுதி படைத்தவர்கள்.* அன்பு இல்லாத இதயம் வறண்ட பாலைவனத்திற்குச் சமமானது.* மன வங்கியில் அன்பு என்னும் பணத்தை முதலீடு செய்யுங்கள். அதுவே பாதுகாப்பான முதலீடு. யாராலும் திருட முடியாது.* பெண்களைத் தாயாகக் காண்பவனே மனிதர்களில் முழுமை பெற்றவன்.* மனிதனைப் பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் நல்லொழுக்கத்திற்கு மட்டுமே இருக்கிறது.-சாய்பாபா