பக்தி ஒரு சத்துணவு
UPDATED : ஆக 20, 2013 | ADDED : ஆக 20, 2013
* நாவை அடக்கினால் ஞானியாகி விடலாம். இதன் அடிப்படையில் தான், உண்ணாமல் விரதமிருப்பது, மவுனம் கடைபிடிப்பது என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தனர்.* நாவைச் சரிப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும். நாவால் உண்டாகும் சுவை, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமையும். * பேச்சு அளவாகவும், இனிமையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் ஒருவரின் ஆற்றல் வெளிப்படும். * பக்தி என்பது வாழ்வில் உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. பக்தியைச் சத்தான உணவாக ஏற்றுக் கொண்டால் வாழ்வு உயரும். * நல்ல நூல்களைப் படிப்பது, நல்லவர்களுடன் பழகுவது, கடவுளிடம் முழுநம்பிக்கை வைப்பது இவையெல்லாம் முன்னேறும் வழிகள்.- சாய்பாபா