நல்லதை மட்டுமே செய்
UPDATED : டிச 11, 2013 | ADDED : டிச 11, 2013
* மனிதன் எப்போதும் தன்னைச் சுற்றி தெய்வீகமணம் கமழச் செய்ய வேண்டுமானால், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும். * செயலுக்கேற்ற விளைவுகள் உங்களின் கற்பனையைப் பொறுத்து உண்டாவதில்லை. செயல்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன.* கடவுள் அன்பு மலையாக இருக்கிறார். அவரிடத்தில் அன்புக்கு குறைவேதும் கிடையாது. அவரின் கருணையைப் பெற எளிதான வழி பக்தி ஒன்றே.* மனிதனுக்கு கடவுள் சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார். ஆனால், அதோடு ஒரு நிபந்தனையும் இருக்கிறது. செய்யும் செயலுக்கேற்ப இன்ப, துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும்.* பணம், பதவி, அதிகாரம் இவற்றைத் தேடி மனிதன் அலைகிறான். இதனால், மனிதப் பண்பு குறைந்து போய் மிருக நிலைக்கு ஆளாகி விட்டான்.- சாய்பாபா