பொருளுக்காக பூஜை வேண்டாம்
* உன்னுடைய பொருள், அந்தஸ்து, ஜாதி ஆகியவற்றை எண்ணி இறுமாப்பு கூடாது. உன்னுடைய உடமை, திறமை, அறிவு, ஆற்றல் அனைத்தையும் கடவுளின் சேவைக்கு அர்ப்பணித்து விட்டால் உன் அகங்காரம் நிச்சயம் அழிந்துவிடும்.* தொட்டியில் தண்ணீர் நிரம்பி இருந்தாலும் தானாகக் கொட்டாது. குழாயைத் திறந்துவிட வேண்டும். அன்பு மனதின் உள்ளே நிரம்பி இருந்தாலும் நற்செயல்களினால் திறந்து விட வேண்டும்.* பொருள் வேண்டி பூஜை செய்வதைவிட, இறைவன் அருள் வேண்டி தர்மம் செய்வதே நலம். * பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதை நாம் அவருக்கு செய்ய வேண்டும்.* கிணற்றில் இறைக்க இறைக்கச் தண்ணீர் சுரக்கும். அதுபோல் செலுத்த செலுத்த அன்பு வலுக்கும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.* பசுவின் பாலில் இருந்து பாலாடை, வெண்ணெய், நெய், தயிர், மோர் எனப் பல பொருள்களைப் படைத்தோம். இறைவன் நமக்கு அறிவைத் தந்தார். நாம் அதில் இருந்து பல பொருள்களைப் படைக்க வேண்டும்.- சாய்பாபா