வாழும் வரை போராடு
* வாழ்வில் லட்சியத்தை அடைய நான்கு நன்னெறிகளைப் பின்பற்ற வேண்டும். அவை தலைவனை (குரு) பின்பற்று, தீமையை எதிர்கொள், வாழ்வின் இறுதிவரை தளராது போராடு, தவறாமல் விளையாட்டை முடித்திடு.* நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவனே மனசாட்சியாக இருக்கிறார். அவரே நம் தலைவர். மனசாட்சியின் குரலுக்கு செவி சாய்த்து நடந்தால் பின்பற்ற முடியும்.* மனதில் எத்தனையோ தீயவுணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. பொறாமை உணர்வால் நாம் மனம் பாழ்பட்டுவிட்டது. எனவே, அன்பினால் மனதை நிரப்புங்கள். எத்தகைய தீய எண்ணத்தையும் மனதில் நுழையவிடாமல் கவனமாக இருங்கள்.* நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். எத்தனை தடைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அதைக் கண்டு மலைக்காமல் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.* வாழ்க்கை ஒரு விளையாட்டு. விதிகளுக்கு உட்பட்டு விளையாடப் பழகுங்கள். தர்மம் என்னும் விதியைப் பின்பற்றி பிறவிப்பயனை அடைவதே நம் வாழ்க்கை விளையாட்டின் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.-சாய்பாபா