நல்லதைப் பின்பற்றுங்கள்
* சோதனை நேர்ந்தால் முயற்சியைக் கை விடுவது கூடாது. எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது என்று மனஉறுதியுடன் கடமைகளைச் சரிவரச் செய்ய முற்பட வேண்டும்.* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே உற்ற நண்பனாக இருங்கள். * படிப்புக்காகவோ, செல்வத்திற்காகவோ கர்வம் கொள்ளக்கூடாது. நாம் பெற்ற கல்வி, செல்வம் மற்றவர்களுக்கு பயன்படுவதாக இருக்கட்டும். * ஒரு மனிதனை சூழ்நிலை தான் உருவாக்குகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், அவனுடைய மனமே அதைவிட முக்கியக் காரணியாகும்.* எல்லா ஆசைகளையும் இறைவனிடமே அர்ப்பணித்து விடுங்கள். மனதைச் சமநிலையில் வைக்க நல்லதைப் பின்பற்றுங்கள்.* நீங்கள் நல்ல செயலைச் செய்தும் கூட உங்களை சிலர் புறக்கணிக்கலாம். அதற்காக கலங்கி விடாமல் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.- சாய்பாபா