உள்ளூர் செய்திகள்

அன்பை விதைப்போம்

* உண்மைக்குப் புறம்பாக ஒரு வார்த்தை கூட பேசாதீர்கள். எதையும் திரித்துக் கூறுவது நல்லதல்ல.* யாரையும் எதற்காகவும் இழிவாக நினைப்பதோ, சொல்வதோ கூடாது.* கடவுள் நமக்கு வேண்டியதை மட்டுமே தருகிறார். ஆனால், பல சமயத்தில் இந்த உண்மையை யாரும் உணர்வதில்லை.* வழிபாட்டின் மூலம் உள்ளத்தில் பள்ளம் தோண்டினால், அதில் அன்பு என்னும் ஊற்று பெருகும்* அன்பை விட மேலான மதம் வேறில்லை. அன்பை எங்கும் விதைத்து அருளை அறுவடை செய்யுங்கள்.- சாய்பாபா