பெற்றோரை மதியுங்கள்
* வாழ்க்கை இன்னதென்று அறியாமல், குறிக்கோள் ஏதும் இல்லாமல் மிருகங்கள் வாழ்கின்றன. மனிதனும் அப்படி விலங்கு வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை.* அடுத்தவர்களின் குறைகளைக் களைவதில் தான் நம் கவனம் அனைத்தும் செல்கிறது. நம் குறைகளை முதலில் களைய முற்படுவதே பயனுடையதாகும். நம்மீது குற்றம் என்பதே இல்லை என்ற உயரிய நிலையை எட்டுவதே நம் கடமையாகும். * பெற்றோரை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் தாய் தந்தையராகும் போது, உங்களை உங்கள் பிள்ளைகள் மதிப்புடன் நடத்துவார்கள்.* மண்ணில் பிறக்கும் உயிர்களில் மனிதப்பிறவி தனிச்சிறப்புடையது. கடவுளின் கரங்களிலிருந்து இவ்வரிய கொடையாகிய மனிதப்பிறவி என்னும் வெகுமதியைப் பெற்ற நாம், அதன் அருமையை உணராமல் வாழ்ந்தால், பெரும் பாவம் செய்தவர்களாகி விடுவோம்.* அன்பே சிவமாக இருக்கிறது. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் குடியிருக்கிறான். ஆழ்ந்த அன்பு கொண்டு அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். அன்பினைத் தொண்டாக மாற்றுங்கள். அதுவே ஆன்மிகவாழ்வில் உயர்ந்த சாதனையாகும்.-சாய்பாபா