மனஅமைதிக்கு எளிய வழிமுறை
UPDATED : செப் 29, 2013 | ADDED : செப் 29, 2013
* சென்றதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கடந்த காலம் இனி திரும்பப் போவதுஇல்லை. வருங்காலத்தைப் பற்றிய கற்பனையும் வேண்டாம். நிகழ்காலத்தை நல்லமுறையில் கழிப்பதே சிறந்தது.* ஆடம்பரம் என்பது அரக்க குணம். இதனால், விருப்பு வெறுப்பு உண்டாகிறது. தலைவனாக விரும்புபவன், தன்னைத் தாழ்த்திக் கொண்டு எளிமையாக வாழ வேண்டும்.* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த மூன்றும் தூய்மையாக இருப்பதற்கு திரிகரண சுத்தி என்று பெயர்.* சுயநலமற்ற சேவை செய்வது தான் மன அமைதிக்கான வழி. வாழ்வில் வசதிவாய்ப்பு, பதவி இவையெல்லாம் வந்து போகும். ஆனால், சேவையில் கிடைக்கும் இன்பம் என்றும் அழியாது. * சுகம், துக்கம், லாபம், நஷ்டம், உயர்வு, தாழ்வு இவற்றை சமமாகக் கருதுங்கள். பிறர் போற்றினாலும், தூற்றினாலும் கவலைப்பட வேண்டாம். - சாய்பாபா