ஆன்மிகத்தின் அடிப்படை
UPDATED : ஏப் 29, 2014 | ADDED : ஏப் 29, 2014
* எப்போதும் தெய்வ சிந்தனையும், தன்னம்பிக்கையும் கொண்டவராக இருங்கள். மற்றவர்களுக்கும் பயனுள்ள விதத்தில் வாழுங்கள்.* பண்டிதனானாலும், செல்வந்தனாக இருந்தாலும் முடிவில் கடவுளின் அருளை பெற்றால் மட்டுமே வாழ்வு முழுமை பெறும்.* பிறருடைய சுதந்திரத்தில் ஒருபோதும் தலையிடாதீர்கள். மற்றவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பது மேலான பண்பு.* ஆசைகளை அடக்குதல், புலன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதலுமே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.- சாய்பாபா