அன்புக்கு குறைவில்லை
UPDATED : பிப் 10, 2014 | ADDED : பிப் 10, 2014
* செயலின் விளைவு, அதைச் செய்வதைப் பொறுத்தே அமையும்.* கடவுள் அன்பு மலை. எறும்புகள் எவ்வளவு இனிப்புத்துகளை எடுத்துச் சென்றாலும், அவரது அன்பு குறைவு படாது.* மனிதனிடம் இருக்கும் மோசமான ஆயுதம் நாக்கு. * சிந்தனைக்கு எல்லாம் சொல் வடிவம் கொடுத்து விடாதீர்கள். சொற்களைத் தேர்ந்தெடுத்து அளவோடு பேசுங்கள்.* பெற்றோரின் பெருங்கொடை நமது உடல். அதை அளித்த அன்னை, தந்தையைப் போற்றி மதியுங்கள்.- சாய்பாபா