உள்ளூர் செய்திகள்

பிரச்னை தீரணுமா...

குளத்தில் நீந்திய மீனை துாரத்தில் இருந்து பார்த்த பருந்து கொத்திச் சென்றது. இதைக் கண்ட இரண்டு காகங்கள் அதைப் பின்தொடர ஆரம்பித்தது. காகங்கள் துரத்துவதை பொருட்படுத்தாமல் அது சென்று கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அது திரும்பி பார்த்த போது காகங்களின் நிறைய பின்தொடர்வதைக் கண்டது. பயம் தொற்றவே பருந்திற்கு என்ன செய்வதென தெரியாமல் தடுமாறியது. கவ்வியிருந்த மீன் கீழே விழுந்தது. அவ்வளவுதான் மீனை நோக்கி விரைந்தன காகங்கள். இது போலத்தான் மனிதனும்.அவன் பேராசை என்னும் மீனை வைத்துக்கொண்டு அலைகிறான். இதனால் காகங்கள் என்னும் பிரச்னைகள் அவனை துரத்துகின்றன. பேராசையைக் கைவிட்டால் பிரச்னைகள் அனைத்தும் ஓடி விடும்.