உள்ளூர் செய்திகள்

திட்டம்

ஹஜ்ரத் ஆதம் (அலை) தன் துணைவி ஹஜ்ரத் ஹவ்வா (அலை) உடன் சுவர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஆணவத்தின் காரணமாக பூமிக்கு விரட்டப்பட்ட இப்லீஸ், சுவர்க்க வாழ்வை நினைத்து வருந்தினான். தனது இழிவான நிலைக்கு காரணமான ஆதம் மீது கோபம் கொண்டான். அவரை பழிவாங்கியே தீருவேன் என சபதம் செய்தான். இதற்கு முதலில் ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வா இருவரையும் பிரித்து, சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டான். அதன்படி சுவர்க்கத்து வாசல் வரை சென்ற இப்லீஸால் உள்ளே நுழையமுடியவில்லை. அறிமுகமான வானவர்கள் வருகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்தார். அந்நேரம் சுவர்க்கத்து அதிகாரியான மயில் வெளியே வந்தது. அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அதனிடம் சென்று, ''ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வாவை சந்திக்க ஏதாவது வழி சொல்'' எனக் கேட்டார்.