எங்கள் பொறுப்பு
UPDATED : ஜூன் 14, 2024 | ADDED : ஜூன் 14, 2024
துார் ஸீனா, துார் நீனா, துார் லீனா, ஜவ்ரி, ஹர்ரா ஆகிய ஐந்து மலைகளில் இருந்து ஜிப்ரீல் கற்களைக் கொண்டு வந்து கொடுக்க, காபா கட்டப்பட்டது. அப்போது ஜிப்ரீல், ''காபாவை வலம் வர மக்களுக்கு அழைப்பு விடுங்கள்'' என்றார். அதற்கு இப்ராகிம், ''என் குரல் எப்படி அனைவருக்கும் கேட்கும்'' என்றார். ''அழைப்பு கொடுப்பது உங்கள் பொறுப்பு. மக்களிடம் அதை அடையச் செய்வது எங்கள் பொறுப்பு'' என்றார் ஜிப்ரீல். அதன்படி இப்ராகிம், 'அபூகுபைஸ்' என்னும் மலை உச்சியை அடைந்தார். அவர் ஏறி நின்ற கல் வளர்ந்து அத்தனை மலைகளையும் விட உயரமானது. அங்கிருந்து அவர், ''நீங்கள் வணங்குவதற்காக காபாவைக் கட்டச் செய்துள்ளான் இறைவன். அதை தரிசிக்க வாருங்கள். ஹஜ் கடமையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அதன்பின்னர் ஹஜ் கடமையாக்கப்பட்டது.