உள்ளூர் செய்திகள்

தப்புக்கு தண்டனை

தடை செய்யப்பட்ட மரத்தின் பழங்களை சாப்பிட்டார் ஹஜ்ரத் ஆதம். இதன்பின் அவரது ஆடைகள் தானாக அவரை விட்டு அகன்றன. தலை மீதிருந்த நவரத்தினக் கற்களாலான கிரீடம் பறவை போல பறந்தது. ஆதமின் மனைவியான ஹஜ்ரத் ஹவ்வா இதே நிலைமைக்கு ஆளானார். நிர்வாணம் ஆனதால் அங்கிருந்த மரத்திற்கு பின்புறம் ஒளிந்தனர். ஆனால் மரங்கள் அவர்களை நெருங்கவிடவில்லை. கடைசியில் ஒரேயொரு மரம் மட்டும் இலைகளை கொடுக்க, அதை ஆடையாக உடுத்திக் கொண்டனர். அப்போது இலந்தை மரம் ஒன்று ஹஜ்ரத் ஆதமின் தலைமுடியை இழுத்து விட்டு, ''இது எனக்கு வந்த உத்தரவு. இதை மீறினால் தண்டனைக்கு ஆளாவேன்'' என்றது. அப்போது ஹஜ்ரத் ஜிப்ரீல், ''இருவரும் இங்கிருந்து வெளியேறுங்கள். இது இறைவனின் கட்டளை'' என்றார். இது சம்பந்தமாக குர்ஆன், 'தப்பு செய்த நீங்கள் சொர்க்கத்தில் இருந்து இறங்குங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு' என்கிறது.