உள்ளூர் செய்திகள்

இறைவனுக்கு விருப்பமல்ல

முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள் போர் செய்ய தயாராக இருந்தனர். இந்நிலையில் நபிகள் நாயகம் வாள் ஒன்றைக் காட்டி, ' உங்களில் போர்க் கடமையை சரிவர நிறைவேற்றுபவர் யார்' என வீரர்களிடம் கேட்டார். அதற்கு பலரும் ஆர்வமுடன் கைதுாக்கினாலும் அபூதுஜானா என்பவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அரபு நாட்டு வீரரான அவர் வாளை பெற்றுக் கொண்டதும் சிவப்புத் தலைப்பாகையை அணிந்து, உடலை அப்படியும் இப்படியும் அசைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டார். அதைப் பார்த்த நாயகம், ''இப்படி நடப்பது இறைவனுக்கு விருப்பம் அல்ல என்றாலும் இந்த நேரத்தில் பெருமிதத்துடன் நடப்பது சரியானதே'' என்றார்.