அந்த நாள்
UPDATED : நவ 03, 2023 | ADDED : நவ 03, 2023
ஒருவர் நபிகள் நாயகத்திடம் சென்று கீழ்க்கண்டவற்றை கேட்டார்.''இறைவனின் முன்னால் மக்கள் கேள்வி கணக்குக்காக அந்த நாளில் நிற்பார்கள். ஆனால் அந்நாளில் அவன் முன் எவர்தான் நிற்க முடியும். அந்த நாள் ஆயிரம் நாட்களுக்குச் சமமானதாயிற்றே'' என வினவினார். அதற்கு அவர், ''அந்த நாள் குற்றவாளிகளுக்கும், இறை துரோகிகளுக்கும் கடுமையான நாளாய் இருக்கும். அது அவர்களுக்கு ஓராயிரம் ஆண்டாகத் தோன்றும். அது தள்ளினாலும் நகர்வதில்லை. ஆனால் இறைநம்பிக்கையாளனுக்கு அந்நாள் லேசானதாக இருக்கும். கடமையான தொழுகை கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதுபோல், அந்நாள் அவன் கண்களுக்கு குளிர்ச்சியாக அமையும்'' என்றார்.