உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ஏன் இந்த அவமதிப்பு?

ஏன் இந்த அவமதிப்பு?

'இவருக்கு என் மீது மறைமுகமாக பெரிய பகை இருக்கும் போலிருக்கிறது; அது, இப்போது வார்த்தைகளாக வெடிக்கிறது...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி முணுமுணுக்கிறார், அந்த கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்.மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். சோனியா, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் தற்போது ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர்.சமீபத்தில், ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, கார்கேவுக்கும், சபையை நடத்திய ஜக்தீப் தன்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு, சில கருத்துக்களை எடுத்து வைத்தார். இதையடுத்து, 'ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உங்களை விட ஜெய்ராம் ரமேஷ் தான் பொருத்தமாக தெரிகிறார்...' என, கார்கேவிடம், நகைச்சுவையாக குறிப்பிட்டார், ஜக்தீப் தன்கர்.ஆவேசம் அடைந்த கார்கே, 'எதிர்க்கட்சி தலைவர் பதவியை யாருக்கு கொடுக்க வேண்டும் என சோனியா தான் முடிவு செய்ய வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் நினைத்தாலும், அவரால் அந்த பதவியில் அமர முடியாது. யாருக்கு எந்த பதவியை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கட்சி தலைமைக்கு நன்றாக தெரியும்...' என்றார். இதைக் கேட்டதும் ஜெய்ராம் ரமேஷின் முகம் சுருங்கி விட்டது. 'ஜக்தீப் தன்கர் மீது கோபம் இருந்தால், அவரிடம் பாய வேண்டியது தானே; எதற்கு என்னை அவமதிக்கிறார், இந்த கார்கே...' என, புலம்பியபடியே நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை