உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம்:

'சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கொடுத்த மாற்று இடத்தில் வீடு கட்டி குடியிருப்போருக்கு, பட்டா வழங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தோம். முதல்வரும், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு, நிலம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க, தலைமைச் செயலர் தலைமை யில், உயர்மட்டக் குழு அமைப் பதாக, உறுதி அளித்துள்ளார்.

டவுட் தனபாலு:

அது சரி... அரசு புறம்போக்கு, ஓடை புறம்போக்குன்னு எல்லா இடத்தையும் ஆக்கிரமிச்சு, வீடு கட்டியிருக்கிறவங்களுக்கு பட்டா வாங்கி குடுத்துடுங்க... இந்த மாதிரி ஓட்டு வாங்கி அரசியல் பண்ற கட்சிகளால தான், வருஷா வருஷம் மழைக்கு சென்னை மாநகரம் மிதக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை! ----

'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன்:

பணி நிரந்தரம் உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, தலைமை செயலர், நிதித்துறை செயலர் ஆகியோருடன் விவாதித்து, நல்ல முடிவை தெரிவிப்பதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கூறினார். ஒரு வாரத்திற்குள் மீண்டும் எங்களுடன் பேசுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்று போராட்டத்தை முடித்து, பணிக்கு திரும்புகிறோம். விரைவாக பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும். இல்லையெனில், 2026 ஜன., 23 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

டவுட் தனபாலு:

அது சரி... ஒரு நாள் தீபாவளி பண்டிகைக்கே, 790 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செஞ்சிருக்கீங்க... 2026 ஜன., 15 முதல் வரும் மூணு நாட்கள் பொங்கல் பண்டிகைக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை பண்ணிட்டு தான், போராட்டம் நடத்தணும்னு தான், ஜன., 23ம் தேதியை தேர்வு பண்ணியிருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! -----

பத்திரிகை செய்தி:

ஏழை பெண்கள் பயனடையும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ, 'சானிட்டரி நாப்கின்' வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், '4,000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது' என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

டவுட் தனபாலு:

'டாஸ்மாக்' மதுபானங்கள் விற்பனையில் வருஷத்துக்கு, சராசரியா, 50,000 கோடி ரூபாயை அரசு அள்ளுதே... அதுல இருந்து, 4,000 கோடி ரூபாயை, பெண்களின் சுகாதாரத்துக்கு செலவு செஞ்சா, குறைஞ்சா போயிடும் என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை