உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இப்படி ஐஸ் வைக்கிறாரே!

இப்படி ஐஸ் வைக்கிறாரே!

சென்னை, ஓட்டேரியில் அ.தி.மு.க, சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'நடிகர் அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி. கோழைகளை எனக்கு பிடிக்காது. தைரியசாலியை தான் பிடிக்கும். எந்த சூழ்நிலையிலும் இடம், பொருள் பார்க்காமல் தன் கருத்துக்களை எடுத்து வைக்கும் என் அலைவரிசையில் அவர் உள்ளார் என்பது எனக்கு சந்தோஷம். அஜித் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்பேன்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அஜித்துக்கு இப்படி ஐஸ் வைக்கிறாரே... விஜய் கட்சி துவங்கியதால், அஜித் ரசிகர்களை அ.தி.மு.க., பக்கம் இழுக்க தான் இப்படி பேசுறாரோ...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 07, 2024 06:45

நடிகர்கள் முன்னால் கட்சி ஆரம்பித்து காணாமல் போன வரலாறுகளை அறிந்த பின்னும் அஜித் வருவார், அதுவும் அதிமுகவின் ஆதரவாக இருப்பார் என்று ‘அப்போதைக்கிப்போதே ‘ துண்டு போடுகிறார் பாவம்


சமீபத்திய செய்தி