உள்ளூர் செய்திகள்

பக்க வாத்தியம்

அங்க தான் கூட்டம்!திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கூட்டுறவு மருந்தக அங்காடி திறப்பு விழா, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்தது. கூட்டுறவு மருந்தக அங்காடிக்கு அருகிலும், எதிரிலும் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன.அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வரவேற்க, இரண்டு மணிநேரம் முன்பே ஆளுங்கட்சி தொண்டர்கள் வந்து விட்டனர். மதுபானக் கடைகளைப் பார்த்ததும், உற்சாக பானத்தை ஏற்றிக் கொண்டு மிதந்தனர். மருந்தகம், மதுபானம் என, இரண்டு அரசு கடைகளும் அருகருகில் இருந்தாலும், மதுபான கடையிலேயே கூட்டம் களைகட்டியது.

இதைக் கண்ட ஒருவர், 'இந்த மருந்தை விட, அந்த மருந்து தான் நல்லா வேலை செய்யும்போல, அதான் அங்க கூட்டம் அதிகமாக இருக்கு...' என்று நகைச்சுவையாக கூறியதும், அங்கிருந்தவர்கள், 'குபீர்' என, சிரித்தனர்.நெளிந்த உடன்பிறப்புகள்...!முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், நேருவும் நெருங்கிய நண்பர்கள். சட்டசபையில் இருவரும் அருகருகே அமர்ந்தபடி, தொடையில் குத்தி விளையாடிக் கொண்டிருப்பர். இந்நிலையில், நேரு கைதானது, பன்னீர்செல்வத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

பிறந்த நாளை கட்சி நிர்வாகிகள் மாலை மரியாதையுடன் கொண்டாடும், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், கடந்த 25ம் தேதி, தன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவித்தார்.நேரு கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதால், 'மூட்-அவுட்டாகி' இருந்த பன்னீர்செல்வம், மதிய உணவு, தலையணை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, கடலூர் சிறைக்கு ஆதரவாளர்களுடன் சென்றார். பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லச் சென்ற நிர்வாகிகள், 'சிறை வாசலில் வாழ்த்து சொல்லலாமா... வேண்டாமா...?' என குழப்பத்தில் நெளிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை