உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கேட்டு தான் வாங்கணுமோ?

கேட்டு தான் வாங்கணுமோ?

திருப்பூர் புத்தகத் திருவிழாவில், தினமும் ஒரு தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், 'திருப்பூரும், காந்தியும்' எனும் தலைப்பில், திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், 'நான் கொஞ்சம் வேகமான பேச்சாளன். எனக்கு கொடுத்துள்ள நிமிடங்களில், நான் வேகமாக சில சொற்களை உங்கள் செவிகளுக்கு அனுப்புவேன்; முடிந்த வரை சேமித்து, பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பேச்சின் நடுவே, கொஞ்சம் கைதட்டுங்கள். 'அப்போது தான் பேச்சாளர்கள் நன்றாக பேச முடியும். ஏனென்றால், 'புத்தக திருவிழாவில் பேச சென்றீர்களே... என்ன கொடுத்தனர்...' என, வீட்டில் கேட்டால், திருப்பூர் வாசகர்கள் கைதட்டியதை, சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்' என, சொல்ல முடியும்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'அரசியல் மேடையில் பேசினால் தாராளமாக பணம் கிடைக்கும்... புத்தக திருவிழாவில் பேசினால் கைதட்டலைக் கூட கேட்டு தான் வாங்கணுமோ...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர் ஆமோதித்து தலையாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ