உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தலைவர் சகலகலா வல்லவர்!

தலைவர் சகலகலா வல்லவர்!

மதுரையில் நடந்த, 'கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் விழாவில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'என் துறையில் முதன் முதலில் தாத்தா கருணாநிதி பெயரில் திட்டம் துவங்கியுள்ளேன். விளையாட்டிற்கும், கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கருதலாம். கருணாநிதி சிறு வயதிலேயே களத்தில் இறங்கி, எல்லா விளையாட்டையும் விளையாடியவர். 'அதன்பின் அரசியலுக்கு வந்ததால், ஆடுகளத்தில் நுழையாமல் தவிர்த்தார். கிரிக்கெட், கால்பந்து என எதுவாக இருந்தாலும், நெருக்கடியான நேரத்திலும், 'டிவி'யில் பார்த்து ரசிப்பார். விளையாட்டுக்கு தேவையான அனைத்து திறமைகளும் அவரிடம் இருந்தன' என்றார்.மூத்த நிர்வாகி ஒருவர், 'நம்ம தலைவர் சகலகலா வல்லவரா இருந்திருக்காருப்பா... அவரது வாரிசுகளிடம் அந்த திறமை இல்லையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
மார் 02, 2024 06:33

அவரது ‘மற்ற’ விளையாட்டுகள் வாரிசுகளுக்கும் மாறாமல் வந்திருக்கிறது


Anantharaman Srinivasan
மார் 01, 2024 22:33

தலைவரிடம் ஆயிரம் திறமைகளிருந்தும் தேவையான நேரத்தில் ஜீன் சரியில்லை. இளமையிலேயே வேஸ்டாகி விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை