உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மறுபடியும் முதல்ல இருந்தா...?

மறுபடியும் முதல்ல இருந்தா...?

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் காங்., - எம்.பி., ஜெயகுமார் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தொகுதிக்கு தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, நீண்ட விளக்கம் அளித்தார்.ஒரு கட்டத்தில், 'இவர் எப்ப முடிப்பார்?' என்ற மனநிலைக்கு நிருபர்கள் வர, ஒன்றரை மணி நேரம் பேசிய எம்.பி., மதிய உணவு நேரமானதால், தன் உரையை முடித்தார்.செய்தியாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட, மூத்த நிருபர் ஒருவர், 'பொதுக்கூட்டம் மாதிரி இவர் பேசுவதை கேட்கவா இங்கு வந்தோம். ரெண்டு கேள்வி கேட்கலாமே...' என, சக நிருபர்களிடம் கூறினார்.உடனே நிருபர் ஒருவர் ஒரு கேள்வி எழுப்ப, மீண்டும் ஜெயகுமார் நீண்ட உரையை துவங்கி விட்டார்.குசும்புக்கார நிருபர் ஒருவர், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்துல, 'கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு' காமெடி மாதிரி, மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி நழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை