உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பிள்ளைகளால் எனக்கு பெருமையே!

பிள்ளைகளால் எனக்கு பெருமையே!

-வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் வேந்தரான, 'ஐசரி' கணேஷ்: ப்ரீத்தா, குஷ்மிதான்னு ரெண்டு மகள்கள், சர்வேஷ்னு ஒரு மகன். ப்ரீத்தா, வேல்ஸ் யுனிவர்சிட்டியோட வைஸ் சான்சிலர். குஷ்மிதா, யு.கே.,யில் சட்டம் தொடர்பான மேற்படிப்பு படிச்சிட்டிருக்கா. மூவருமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல். குறிப்பாக மகள்கள்... அதிலும், ப்ரீத்தா இன்னும் ஸ்பெஷல். முதல் குழந்தை பொண்ணா இருக்கணும்னு நானும், மனைவியும் ஆசைப்பட்டோம். அப்படியே ப்ரீத்தா பிறந்தா. இரண்டாவது குழந்தை பையான இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுவும் பெண் குழந்தையா பிறந்ததும் சிறு ஏமாற்றம் இருந்தது.ஆனால் நான் அப்படி நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்பது, பிள்ளைங்க வளர வளர தான் உணர்ந்தேன். அதே மாதிரி, குழந்தைகளை ஒருத்தரை வைத்து, இன்னொருத்தரை ஒப்பிடக்கூடாது என்பதையும் கற்றுக் கொண்டேன்.ப்ரீத்தாவுக்கு, சென்னையில் உள்ள பெஸ்ட் ஸ்கூல்ல அட்மிஷன் வாங்க ரொம்ப சிரமப்பட்டேன். அந்த அனுபவம் தான், ஸ்கூல் ஆரம்பிக்கிற ஐடியாவை கொடுத்தது. ப்ரீத்தா, ப்ரீகேஜியில் துவங்கி, ப்ளஸ் டூ வரை ஸ்கூல் பர்ஸ்ட். காலேஜில் இன்ஜினியரிங் யுனிவர்சிட்டி லெவல்ல ரேங்க் ஹோல்டர். மெரிட்ல, 'லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்'ல, 'சீட்' கிடைத்தது. ரொம்ப செல்லமா வளர்ந்தவளை எப்படி பிரிஞ்சு இருக்கப் போறோம்ன்னு நினைச்சேன். ஆனா, அவ தைரியமா போய் படித்து, அங்கும், 'டிஸ்டிங்ஷன்' வாங்கினா. அவ, 'கிராஜுவேஷன்' வாங்கியதை பார்த்த அந்த தருணத்தை, இப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்க்கும்.பி.ஜி., முடித்ததும், ப்ரீத்தாவுக்கு லண்டனில் வேலை பார்க்கிற, 'ஐடியா' இருந்தது. 'இத்தனை படிப்பு படிச்சிட்டு ஏதோ ஒரு நாட்டுல, யாருக்காகவோ வேலை பார்க்கறதுக்கு பதிலா, நம்ம நிறுவனத்துக்கே வேலை பார்க்கலாமே'ன்னு சொன்னேன்.உடனே சம்மதிச்சா. இப்போது, வேல்ஸ் குழுமத்தோட வைஸ் சான்சலர் பொறுப்பை எடுத்துக் கொண்டாள். நிர்வாகம் பண்றதுல ப்ரீத்தா கெட்டிக்காரின்னா, 'பீப்பிள் ஹேண்ட்லிங்'கில் குஷ்மிதா பிரமாதப்படுத்துவா. 'லா' முடிச்சிட்டு, லண்டனில், மகாத்மா காந்தி படித்த, யு.சி.எல்.,ல பி.ஜி., பண்ணிட்டு இருக்கா. குஷ்மிதா பிறந்து, 12 ஆண்டுகள் கழித்து தான், மகன் சர்வேஷ் பிறந்தான். இப்ப, டென்த் கிரேடில் இருக்கான். 'வாத்தியார் பிள்ளை மக்கு'ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. நான் இத்தனை கல்வி நிலையங்கள் நடத்தறேன்... அந்தப் பெயரை காப்பாத்தற மாதிரி மூன்று பிள்ளைங்களுமே படிப்பில் எந்த குறையும் வைக்கலைங்கிறதுல, அப்பாவா ரொம்ப பெருமை எனக்கு.'நீ எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும், உன் கால் தரையில் படுற மாதிரி தான் நடக்கணும்'ங்கிறது, எங்கப்பா, 'ஐசரி' வேலன் எனக்கு சொல்லிக் கொடுத்தது. அதைத் தான் என் பிள்ளைங்களுக்கும் சொல்லி வளர்த்திருக்கிறேன்.எல்லா அப்பாக்களுக்கும் இருக்குற சராசரி கனவு தான் எனக்கும்... என் மகள்களுக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணனும். அவங்களுக்கு பிடித்த மாதிரி மண வாழ்க்கை அமையணும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ