உள்ளூர் செய்திகள்

சுத்தம் அழகு!

நான், முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்; புதுச்சேரி, கரியமாணிக்கத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 1992ல், 6ம் வகுப்பு படித்த போது நிகழ்ந்த சம்பவம்! சமூகவியல் ஆசிரியர் சக்திவேல், மாணவர்கள் நன்றாக படிப்பதற்கு, அவர் ஒரு உத்தியை கையாண்டார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு, யார் பதில் கூறுகின்றனரோ, அவர்களுக்கு, பேனா, பென்சில் பரிசாக வழங்குவதுடன், அனைவரையும் கைதட்டச் சொல்லி, பாராட்டி கவுரவிப்பார். இந்த பாராட்டுக்காகவே, நாங்கள் போட்டி போட்டு படிப்போம்.இது மட்டும் அல்லாது ஆடை சுத்தமாக இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு, சோப்பு வாங்கி தருவார். 'சுத்தம் அழகு...' என்பார். அனைத்து மாணவர்களுக்கும் அவரை பிடிக்கும்; இன்றும், என் பள்ளி படிப்பு நினைவுக்கு வரும் போது மறவாது சக்திவேல் ஆசிரியர் நினைவுக்கு வருவார். என் தோழிகள், குடும்பத்தினர் அனைவரிடமும் ஆசிரியரின் நற்பண்புகளை கூறி மகிழ்வேன்!- செ.சாமுண்டீஸ்வரி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !