உள்ளூர் செய்திகள்

டைலான் தாமஸ் படகு வீடு!

இங்கிலாந்திலுள்ள மிகவும் புகழ் பெற்ற கவிஞனான டைலான் தாமஸும், அவரது மனைவியும் வசித்த வீடுதான், தற்போது ஒரு சிறிய அளவிலான தேவாலயமாக மாறியிருக்கிறது.வியாபார ஸ்தலமாக்கப்படாமலிருந்த 'லாகர்னே'யில் அமைதியான செயின்ட் மார்ட்டின் தேவாலயமா உருமாறிய இது, சிறிய மலை உச்சியில் இருக்கிறது. அப்பகுதியில் உள்ள ஒரு படகு வீட்டில்தான் அவ்விருவரும் வாழ்ந்தனர். அங்கு வெண்மை நிறத்திலுள்ள ஒரு சின்ன 'சிலுவை'தான் அவர்களை அடையாளம் காட்டுகிறது. டைலான் ஒரு பிரசித்திப் பெற்ற கவிஞன். அருகிலேயே உள்ளது அவருடைய படகு வீடு. அந்த காவிய கவிஞனின் ரசிகர்கள் எல்லா நாட்களிலும் வந்தபடி இருக்கின்றனர் 'Under Milk Wood' என்கிற அவருடைய காவியம் திரைப்படமாக்கப் பெற்று, அதில் நடித்த ரிச்சர்ட் பர்ட்டனுக்கு பெரும் புகழைத் தந்தது.டைலான் தாமஸின் எழுதும் பட்டறை, வீடு, மற்ற பொருட்களை எல்லாரும் அப்படியே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. முப்பத்து ஒன்பது வயதில் மரணம் தழுவிய கவிஞன் விட்டுச் சென்ற எழுதும் பேப்பர்கள் அவனுடைய மேஜையில் காற்றில் படபடத்தபடி இன்றும் உள்ளன.'டெப்' நுழைவாயில் ஒருவித இசைக் காவியத்துடன் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ள படகு வீடு ஒரு வித நிசப்தத்துடன் இருக்கிறது. முதலாவது இடம் இங்கிலாந்தின் எல்லையிலிருக்கும் கார்டிபிலிருந்து மேற்கு திசையில் 161 கி.மீ., தள்ளியும் அவ்விடம் இருக்கிறது.ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 3 வாரம் டைலான் தாமஸ் கவிதைத் திருவிழா நடைபெறும். அந்த சமயம் இங்கு சுற்றுலா செல்வது சிறப்பானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !