பூண்டு மஞ்சள் பால்!
தேவையான பொருட்கள்:பால் - 1 கப்பூண்டு - 6 பல்மஞ்சள், மிளகுத்துாள் - சிறிதளவுபனங்கற்கண்டு - தேவையான அளவு.செய்முறை:பாலுடன், மஞ்சள், மிளகுத்துாள் சேர்த்து கொதிக்க விடவும்; அரைத்த பூண்டை நன்றாக வேக வைக்கவும். இதை பாலுடன் சேர்க்க வேண்டும். பின், பனங்கற்கண்டு கலந்து இறக்கவும். சுவைமிக்க, 'பூண்டு மஞ்சள் பால்' தயார். சளி தொந்தரவால் அவதிப்படுவோருக்கு உடனடி நிவாரணம் தரும். எல்லா வயதினரும் பருகலாம்.- டி.என்.ரங்கநாதன், திருச்சி.